Wednesday, November 26, 2008

இதுக்கப்புறமும் யாராவது ஆஸ்கார் பற்றி பேச ஆசைப்படறிங்களா ?

சிலநாள் முன்பு நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக மயிலாப்பூர் வரை சென்றிருந்தேன். நகரில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி மாநாடு நடப்பதால் வெளியூரில் இருந்து பஸ், லாரி, வேன், கார், பைக், சைக்கிள், கால்நடை என பல ரூபத்திலும் கட்சியின் இளைஞர்(?) அணியினர் தீவுத்திடலை நோக்கி படையெடுத்த வண்ணமிருந்தனர். இதனால் சனிக்கிழமை வழக்கத்தைவிட கூடுதலான போக்குவரத்து நெரிசலில் நான் சென்ற பேருந்தும் சிக்கிக்கொண்டது. ஜன்னலோர சீட் கிடைத்த சந்தோஷத்தில் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்ல ஆரம்பித்தேன்.



மாநாட்டையொட்டி நகரில் ஆங்காங்கே தலைவர் அழைக்கிறார் பாணியில் விளம்பர பேனர்கள். இந்த மாதிரி விளம்பர பேனர்களில் காணப்படும் அரசியல் தலைவருக்கான சிறப்பு பட்டங்கள் சமயத்தில் சூடான பஜ்ஜி வைத்து சாப்பிடும் 3 நாளைக்கு முந்தைய தினத்தந்தியில் வரும் கள்ளக்காதல் விவகாரங்களை விடவும் வெகு சுவாரசியமாக இருக்கும். இன்றும் போக்குவரத்து நெரிசலில் 100 அடிகளுக்கு ஒருமுறை தயங்கி தயங்கி நின்று சென்ற பேருந்தில் நேரத்தை ஓட்டுவதற்கு வேறு வழியிலாமல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை படிக்க ஆரம்பித்தேன்.

யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற வலையுலக பழமொழிக்கேற்ப அந்த பொன்மொழிகள் உங்கள் பார்வைக்கும்.

புரட்சி கலைஞர் அழைக்கிறார்
(நோ கமெண்ட்ஸ்)

இருண்ட தமிழகத்தின் ஒளிவிளக்கே

(அப்போ சாலிகிராமம் மக்கள் கலைஞர் ஆட்சியோட கரண்ட் கட் பத்தி ஃபீல் பண்ணவே மாட்டாங்க)

வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளியே.
(அட!!!!!!!)

வருங்கால காமராஜர் அழைக்கிறார்.
(அடப்பாவமே அவரையும் விட்டு வைக்கலையா?)

வருங்கால முதல்வர் அழைக்கிறார்.
(ஒரு சீட்டுதானே இருக்கு. அதுக்கு எத்தனை பேருப்பா?)

கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்.

(நல்லவேளை எம்.ஜி.ஆர் அப்பவே போயிட்டாரு)

பகுத்தறிவு பல்கலைக்கழகமே!!!!!

(அடக்கொடுமையே...)

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அழைக்கிறார்
(முதலில் ஒருமுறை முதல்வர் ஆகுங்க. நிரந்தரம் பத்தி அப்புறம் பேசலாம்)

தமிழினத்தின் காவலனே..

(ஸ்ஸ்ஸ்ஸ்...ப்ப்பா...)

மாவட்டம்தோறும் இலவசமாக
கம்ப்யூட்டர் தந்த தமிழகத்தின் பில்கேட்ஸ் அழைக்கிறார்.
(நல்லவேளை பில்கேட்ஸீக்கு தமிழ் தெரியாது)

இவ்வளவு கொடுமையையும் என் ரெண்டு கண்ணால் பார்த்ததில் கொஞ்சநேரத்துக்கு கண்ணெல்லாம் கலங்கி பார்வைமங்கி போனதைக்கூட பொறுத்துக்கிட்டேங்க.

ஆனால் அதுக்கப்புறம் கடைசியாக என் கண்ணுக்கு ஒரு பேனர் அம்புட்டுச்சு பாருங்க..

அதிலே அவர் ரீஜண்டா நடிச்சு வந்த படத்தோட(அரசாங்கம்னு நினைக்கிறேன்) போலீஸ் கெட்டப் ஸ்டில் ஒண்ணு சும்மா ஒரு 10 அடி உயரத்துக்கு பளபளன்னு. பத்தாததுக்கு இந்த ஹெல்மெட் யூஸ் பண்ற பார்ட்டியெல்லாம் போடுவாங்களே சின்னதாக ரவுண்ட் கேப். அதுமாதிரி ஒரு கேப் போட்டுக்கிட்டு நல்லா நச்சுன்னு ஒரு போஸ் கொடுப்பாரு.
(காலையிலே அவரத்துல எந்திரிச்சு வந்து தூக்ககலக்கத்துல அந்த ஸ்டில்லை பார்த்தால் வாட்ச்மேன் மாதிரியே இருக்கும் அப்படிங்கிறது வேற விஷயம்)

அந்த ஸ்டில்லுக்கு பக்கத்திலே வழ்க்கம்போல் ஒரு பொன்மொழி..

எவ்வளவோ படிச்சுட்டோம் இதைப்படிக்க மாட்டோமான்னு கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன்.

அது........ அது...........

"தலைவா இதற்குபிறகும் உனக்கு ஆஸ்கர் விருது கிடைக்காவிட்டால் அது ஆஸ்கார் விருதை வழங்கும் அந்த அமெரிக்க குழுவுக்குத்தான் அவமானம்"


இப்ப சொல்லுங்க இதுக்கப்புறமும் தமிழ்படம் ஏதாவது ஆஸ்கார் விருது வாங்கனும்னு ஆசைப்படறீங்களா மக்கா?


டிஸ்கி: எனக்கு எந்த அரசியல்வாதி மீதும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் காலையிலேயே 1 மணிநேரம் தவறாமல் வரிசையில் நின்று வாக்களித்து மீதி இருக்கும் நாளை டிவி யின் முன் வெட்டியாய்போக்கும் சாதாரண இந்திய குடிமகன் நான்.

hi.. hi.. ஒரு மீள்பதிவு..

26 comments:

Santhosh said...

ஏம்பா நல்லாத்தானே போயிட்டு இருந்திச்சி.. எழுதலமுல்ல.. சரி சரி தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன் வந்து சேருங்க..அப்படியே இந்த word verificationஜ எடுங்க.

Thamiz Priyan said...

டெஸ்ட் கமெண்ட் 1

Thamiz Priyan said...

டெஸ்ட் சக்ஸஸ்!

கார்க்கிபவா said...

உங்களுக்குத்தான் எவ்ளோ கஷ்டங்க.. அய்யோ பாவம்

ஜிங்காரோ ஜமீன் said...

@சந்தோஷ்
வருகைக்கு நன்றி சந்தோஷ்

@தமிழ்பிரியன்
உதவிக்கு நன்றி தமிழ்பிரியன்

@கார்க்கி
ஆமாம் கார்க்கி. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்.

@ஜி
வருகைக்கு நன்றி ஜி

SK said...

ஹலோ ஜமீன்
உங்க வலை பூவுக்கு முதல் ஆளா பின் தொடர்கிறேன், நீங்க என்னை வரவேற்கவே இல்லை
நானே என்னை வரவேத்துகறேன்.

அண்ணன் ஜிங்காரோ ஜமீன் வலை பூவிற்கு வருக வருக

அண்ணன் ஜிங்காரோ ஜமீன் வாழ்க..... ஜமீன் புகழ் ஓங்குக .................

இது எப்படி இருக்கு??

கீர்த்தி

ஜிங்காரோ ஜமீன் said...

//
ஹலோ ஜமீன்
உங்க வலை பூவுக்கு முதல் ஆளா பின் தொடர்கிறேன், நீங்க என்னை வரவேற்கவே இல்லை
நானே என்னை வரவேத்துகறேன்.

அண்ணன் ஜிங்காரோ ஜமீன் வலை பூவிற்கு வருக வருக

அண்ணன் ஜிங்காரோ ஜமீன் வாழ்க..... ஜமீன் புகழ் ஓங்குக .................

இது எப்படி இருக்கு??

கீர்த்தி
//

அடடா கொஞ்சநாள் இந்தப்பக்கமே வரமுடியலை. அதுதான் கவனிக்கலை.

ஜிங்காரோ ஜமீன் பக்கத்திற்கு வந்த கீர்த்திக்கு நல்வரவு.

ஜிங்காரோ ஜமீன் said...

//
அண்ணன் ஜிங்காரோ ஜமீன் வலை பூவிற்கு வருக வருக

அண்ணன் ஜிங்காரோ ஜமீன் வாழ்க..... ஜமீன் புகழ் ஓங்குக .................

இது எப்படி இருக்கு??
//

அடடா இதை மறந்துட்டேனே...

இதெல்லாம் பார்த்தால் பயமாயிருக்கு.

அவ்வ்வ்வ்வ்வ்.......

ஜிங்காரோ ஜமீன் said...

சும்மா பின்னூட்ட டெஸ்ட்

Anonymous said...

ஐயோ பாவம்.. பஸ் டிராபிக்கில சிக்கினது பத்தாதுன்னு.. இப்படியெல்லாம் வேற கஷ்டபட்டிங்களா.. எல்லாம் தலவிதிங்க.. வேற என்ன சொல்றது..

துளசி கோபால் said...

'சம்பவம்' நடந்த தினம் 'நம்மாளும்'கூட அங்கேதான் இருந்துருக்கார்.

ஆனா

'நிறையக்கூட்டம்மா. தாற்காலிகமா ரோடையெல்லாம் மூடிவச்சுட்டு, சுத்திச் சுத்தி வரவேண்டியதாப் போச்சு'
இம்புட்டுதான் சொன்னாரே தவிர இப்படி வீரதீர பராக்கிரமங்களையெல்லாம் சொல்லாம விட்டுட்டாரே இந்த கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்த்:-)))))

ஸ்ரீதர்கண்ணன் said...

பகுத்தறிவு பல்கலைக்கழகமே!!!!!
(அடக்கொடுமையே...)

மாவட்டம்தோறும் இலவசமாக கம்ப்யூட்டர் தந்த தமிழகத்தின் பில்கேட்ஸ் அழைக்கிறார்.
(நல்லவேளை பில்கேட்ஸீக்கு தமிழ் தெரியாது)

"தலைவா இதற்குபிறகும் உனக்கு ஆஸ்கர் விருது கிடைக்காவிட்டால் அது ஆஸ்கார் விருதை வழங்கும் அந்த அமெரிக்க குழுவுக்குத்தான் அவமானம்"


கலக்கல் காமெடி.... Super

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களுக்கு கவனிக்கும் சக்தி ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅதிகம்

ஜிங்காரோ ஜமீன் said...

//
எல்லாம் தலவிதிங்க.. வேற என்ன சொல்றது..
//
அதுவும் சரிதாங்க.
வருகைக்கு நன்றி

ஜிங்காரோ ஜமீன் said...

//
இப்படி வீரதீர பராக்கிரமங்களையெல்லாம் சொல்லாம விட்டுட்டாரே இந்த கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்த்:-)))))
//
யாருங்க அவரு?:)

ஜிங்காரோ ஜமீன் said...

வருகைக்கு நன்றிங்க துளசிம்மா..

ஜிங்காரோ ஜமீன் said...

முதல் வருகைக்கு நன்றி ஸ்ரீதர்கண்ணன்

ஜிங்காரோ ஜமீன் said...

//
உங்களுக்கு கவனிக்கும் சக்தி ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅதிகம்
//
அதுதாங்ண்ணா பெரிய்யாஆஆஆஆஆ தப்பா போயிடுச்சு..

வருகைக்கு நன்றி சுரேஷ்

முரளிகண்ணன் said...

:-))))))))))))

ஜிங்காரோ ஜமீன் said...

//
முரளிகண்ணன் said...

:-))))))))))))
//
வருகைக்கு நன்றி முரளிகண்ணன்

உண்மைத்தமிழன் said...

முடியல சாமி.. முடியல..

கொஞ்ச தூரம் தள்ளிப் போயிருந்தீங்கன்னா இன்னொரு கட்அவுட்டையும் பார்த்திரு்ககலாம். உங்களுக்குக் கொடு்த்து வைக்கலைன்னு நினைக்கிறேன்..

'தமிழகத்தின் பிரபாகரனே' என்று இருந்தது..

தொண்டர்களின் ஆர்வக் கோளாறுதான் வேறென்ன..?

Athisha said...

யோவ் தலைவன பத்தி தப்பா பேசறீயா...

அடிங்க...

எடுங்கடா அந்த இரும்பு கம்பிய...

ஜிங்காரோ ஜமீன் said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முடியல சாமி.. முடியல..

கொஞ்ச தூரம் தள்ளிப் போயிருந்தீங்கன்னா இன்னொரு கட்அவுட்டையும் பார்த்திரு்ககலாம். உங்களுக்குக் கொடு்த்து வைக்கலைன்னு நினைக்கிறேன்..

'தமிழகத்தின் பிரபாகரனே' என்று இருந்தது..
//

நல்லவேளை தப்பிச்சேன்:)

வருகைக்கு நன்றி உண்மைத்தமிழன்

ஜிங்காரோ ஜமீன் said...

//
அதிஷா said...

யோவ் தலைவன பத்தி தப்பா பேசறீயா...

அடிங்க...

எடுங்கடா அந்த இரும்பு கம்பிய...
//

என்ன அதிஷா நீங்கதானே இப்படி ஒரு பதிவு போடச் சொன்னீங்க...

Tech Shankar said...

//
மாவட்டம்தோறும் இலவசமாக கம்ப்யூட்டர் தந்த தமிழகத்தின் பில்கேட்ஸ் அழைக்கிறார்.
(நல்லவேளை பில்கேட்ஸீக்கு தமிழ் தெரியாது)

hi. jolly.. i like this post

ஜிங்காரோ ஜமீன் said...

Sharepoint the Great said...

//
hi. jolly.. i like this post
//
வருகைக்கு நன்றி நண்பரே