Thursday, December 4, 2008

நடிகர் பிரபுதேவா மகன் மரணம்

பிரபல த‌மி‌ழ் நடிகரு‌ம், இய‌க்குனருமான ‌பிரபுதே‌வி‌ன் ம‌க‌ன் உட‌ல் நல‌க்குறைவா‌ல் இ‌ன்று காலை மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

நடன இய‌க்குனராக இரு‌ந்து நடிகர், இயக்குனரானவர் பிரபுதேவா. இவ‌ர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால் (13), ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள்.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக விஷா‌ல் உடல் நலக் குறைவா‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.

விஷால் உடல் செ‌ன்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு‌ள்ளது. நடிகர்கள், இய‌க்குன‌ர்க‌ள் உ‌ள்பட பல‌ர் அஞ்சலி செலுத்தின‌ர்.

விஷால் உடல் இன்று மாலை பெசன்ட் நகரில் தகன‌ம் செய்யப்படுகிறது

8 comments:

அமர பாரதி said...

பிரபு தேவாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கடவுள் அவருக்கு ஆறுதலை அளிக்கட்டும்.

Boston Bala said...

:(

selventhiran said...

அடடா பலரை ஆட்டுவித்த பிரபுதேவாவை இறைவன் ஆட்டுவிக்கிறார் போலும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

இலவசக்கொத்தனார் said...

:(

Sundar Padmanaban said...

புத்திர சோகம் கொடுமையானது. காலம்தான் மருந்து.

அஞ்சலிகள், பிரார்த்தனைகள்.

துளசி கோபால் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

பெத்தவங்க கண் முன்னே புள்ளைங்க போறது ரொம்ப வருத்தமான விஷயம்.

anujanya said...

கடவுளுக்கு விஷாலை மிகவும் பிடிக்கும் போல. பிரபுதேவா குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்.

சந்தனமுல்லை said...

:((